லாரி உரிமையாளர் வீட்டில் 28 பவுன் நகைகள் திருட்டு
இந்நிலையில், அவரது வீட்டின் கதவு திறந்து இருப்பதைப் பார்த்து பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் தொலைபேசி மூலம் சந்திரசேகருக்கு இன்று காலை தகவல்


தூத்துக்குடி டூவிபுரம் 11-வது தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் சந்திரசேகர் (43). லாரி உரிமையாளர். இவர் நேற்று(ஜன.10) மாலை ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்செந்தூருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தாரம்.
இந்நிலையில், அவரது வீட்டின் கதவு திறந்து இருப்பதைப் பார்த்து பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் தொலைபேசி மூலம் சந்திரசேகருக்கு இன்று காலை தகவல் தெரிவித்துள்ளனர். அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பூட்டுகள் உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 28 பவுன் நகைகள், 82ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சந்திரசேகரின் தந்தை நடராஜன் மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...