மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவிலி. அரசு மருத்துவமனையில் தீவிர இருதய சிகிச்சை பிரிவு தொடக்கம்

தீவிர இருத சிகிச்சை பிரிவை, சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் முன்னிலையில், குத்துவிளக்கேற்றி நகர்மன்ற தலைவி வி.செந்தில்குமாரி திறந்து வைத்தார்.பின்னர் நடைபெற்ற விழாவில் நகர்மன்ற

News image
Updated On :12 ஜனவரி 2013, 10:05 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர இருதய சிகிச்சை பிரிவு தொடக்க விழா நடைபெற்றது.விழாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கே.ராஜாகுணசீலன் தலைமை தாங்கினார். டாக்டர் காளிராஜ் வரவேற்றார்.

தீவிர இருத சிகிச்சை பிரிவை, சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் முன்னிலையில், குத்துவிளக்கேற்றி நகர்மன்ற தலைவி வி.செந்தில்குமாரி திறந்து வைத்தார்.பின்னர் நடைபெற்ற விழாவில் நகர்மன்ற தலைவி வி.செந்தில்குமாரி பேசுகையில் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்தவர் மற்றும் மருத்துவர்களின் கூட்டு முயற்சியால், அரசை எதிர்பார்க்காமல் பொது மக்கள் நலன் கருதி, இருக்கும் மருத்துவ உபகரணங்களைக் கொண்டு ரூ.1.50 லட்சம் மதிப்பில் இரு படுக்கை கொண்ட தீவிர இருதய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது பாராட்டுகுரியது. ஒவ்வொரு சிறிய காரியங்களுக்கும் அரசு உத்தரவை எதிர்நோக்கி இருந்தால் காலதாமதம் ஆகும். ஆனால் இங்குள்ள மருத்துவர்கள் மனித நேயத்துடன், கூட்டு முயற்சி எடுத்து இந்த பிரிவை ஆரம்பித்துள்ளார்கள். இது ஏனைய அரசு மருத்துவர்களுக்கும் ஒரு நல்ல முன்னுதாராணம். இந்த மாத்திரை இல்லை, மருந்து இல்லை, அரசு வழங்கவில்லை என்று கூறுவதைத் தவிர்த்து, இது போன்று செய்யும் தொழிலில் முழு ஈடுபாட்டுடன் மருத்துவர்கள் இருந்தால் அரசு மருத்துவமனைகளின் பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நல்ல முன்னுதாரணத்தை மனதார பாராட்டுகிறேன் என்றார் அவர்.வெ.பொன்னுப்பாண்டியன் எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் மருத்துவமனைப் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.