மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 117 ஆழ்துளை கிணறு அமைக்க போர்க்கால நடவடிக்கை: ஒன்றியக் குழுத் தலைவர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 117 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று

News image
Updated On :12 ஜனவரி 2013, 2:22 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 117 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், திருவண்ணாமலை ஊராட்சி, இந்திராநகரில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, அதில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்து ஒன்றியக் குழுத் தலைவர் காளிமுத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியப் பகுதியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்வரின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் ஏழை, எளிய, தேவையில் உள்ள கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

விழாவிற்கு ஊர் தலைவர் ரவி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு துணைத் தலைவர் முத்தாலம்மாள் ராமசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் மாரிமுத்து, மயில்ராவணன், மீனா, சித்திரவேல், திருவள்ளுவன், ஆணையாளர் வெள்ளைச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், அ.தி.மு.க. கிளைச் செயலாளர் நடராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.