தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகள்: ஒன்றியக் குழுத் தலைவர் காளிமுத்து ஆய்வு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், அத்திகுளம்-செங்குளம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், அத்திகுளம்-செங்குளம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது பணியில் ஈடுபட்டிருந்த கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களிடம் தலைவர் காளிமுத்து பேசுகையில், தமிழக முதல்வர் ஏழைகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். கடைக்கோடி மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய அரசு அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
ஆய்வின் போது அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெள்ளைச்சாமி, சந்திரசேகர், துணைத் தலைவர் முத்தாலம்மாள், கவுன்சிலர் சிவனாண்டி உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...