மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தூங்கிக் கொண்டிருந்த இளைஞருக்கு கத்திக் குத்து

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி, ராமசாமியாபுரம், கிருஷ்மூர்த்தி மகன் வீரபுத்திரன் (28). திருமணம் ஆகாத இவர் தேங்காய் வெட்டு வேலைக்குச் செல்வாராம். இவர்  நேற்று(திங்கள்கிழமை) இரவு இங்குள்ள டி.இ

News image
Updated On :15 ஜனவரி 2013, 12:49 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை பல இடங்களில் குத்திவிட்டுச் செனற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி, ராமசாமியாபுரம், கிருஷ்மூர்த்தி மகன் வீரபுத்திரன் (28). திருமணம் ஆகாத இவர் தேங்காய் வெட்டு வேலைக்குச் செல்வாராம். இவர்  நேற்று(திங்கள்கிழமை) இரவு இங்குள்ள டி.இ.எல்.சி. பள்ளி அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். இன்று அதிகாலை அங்கு வந்த நபர், வீரபுத்திரனை பல இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்து அவரது தந்தை கூமாப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வீரபுத்திரனை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கத்தியால் குத்திவிட்டுச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.