ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தூத்துக்குடி அருகே காவலாளி மர்மச் சாவு

தூத்துக்குடி போல்பேட்டை நேதாஜிநகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன் (49). இவர் அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இன்று

News image
Updated On :16 ஜனவரி 2013, 12:32 pm

INBARAJ

தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டப பகுதியில் இன்று அதிகாலை சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்து கிடந்த காவலாளி குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி போல்பேட்டை நேதாஜிநகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன் (49). இவர் அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இன்று அதிகாலை விஜயராகவன் இறந்து கிடந்தாராம்.தகவலறிந்ததும் வடபாகம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று விஜயராகவனின் உடலை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த காவலாளி விஜயராகவனை யாரேனும் அடித்துக் கொன்றனரா? அல்லது குடிபோதையில் கீழே விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த விஜயராகவன் மீது காவல் நிலையத்தில் வழக்கு இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.