ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சேதுக் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

சேதுக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட மதசார்பற்ற ஜனதா தளம் மாநாடு மற்றும் மூத்த வழக்கறிஞரும், கட்சியின் மாநில துணைத் தலைவருமான எம்.

News image
Updated On :27 ஜனவரி 2013, 9:38 am

INBARAJ

சேதுக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட மதசார்பற்ற ஜனதா தளம் மாநாடு மற்றும் மூத்த வழக்கறிஞரும், கட்சியின் மாநில துணைத் தலைவருமான எம்.சொக்கலிங்கத்திற்கு பாராட்டு விழா ஆகியவை தூத்துக்குடி டிஏ திருமண மண்டபத்தில் நடைபெற்றது.விழாவின்போது, மாநாட்டு சிறப்பு மலரை நீலலோகிததாசன் வெளியிட முதல் பிரதியை முகம்மது இஸ்மாயில் பெற்றுக் கொண்டார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்,

சேதுக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியை வரட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.தூத்துக்குடியில் இருந்து இரவு நேர விமான சேவை தொடங்க வேண்டும். தூத்துக்குடி- கொழும்பு இடையேயான பயணிகள் கப்பலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் பழுதான நிலையில் காணப்படும் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.