நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையநல்லூரில் பெண்ணிடம் ரூ. 2. லட்சம் மோசடி செய்த 9 பேர் மீது வழக்கு

கடையநல்லூர்,முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கண்ணன்,வெள்ளைச்சாமி,முப்புடாதி.ஜோதிராமலிங்கம்,முருகையா,ஆறுமுககுமார்,சங்கர்,ரத்தினவேல்,கணேசன்,வைத்தியலிங்கம் ஆகிய 10 பேரும் சேர்ந்து மோட்டார் வாகன நிதிநிறுவனத்தை நடத்தி வந்தார்களாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணன் இறந்து விட்டாராம். இந்நிலையில்

News image
Updated On :28 ஜனவரி 2013, 2:40 pm

வி.குமாரமுருகன்

கடையநல்லூரில் பெண்ணிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்த 9 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடையநல்லூர்,முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கண்ணன்,வெள்ளைச்சாமி,முப்புடாதி.ஜோதிராமலிங்கம்,முருகையா,ஆறுமுககுமார்,சங்கர்,ரத்தினவேல்,கணேசன்,வைத்தியலிங்கம் ஆகிய 10 பேரும் சேர்ந்து மோட்டார் வாகன நிதிநிறுவனத்தை நடத்தி வந்தார்களாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணன் இறந்து விட்டாராம். இந்நிலையில் கண்ணனின் மனைவி விஜயலெட்சுமி, தனது கணவரின் பங்கு தொகையை திருப்பி தருமாறு கேட்டாராம்.இதனையடுத்து சில பத்திரங்களில் விஜயலெட்சுமியிடம் கையெழுத்து பெற்ற மற்ற பங்குதாரர்கள் பங்குத் தொகையான ரூ. 2லட்சத்தை திருப்பி கொடுக்க வில்லையாம்.இது தொடர்பாக கடையநல்லூர் காவல் ஆய்வாளர் சபாபதி,உதவி ஆய்வாளர் சிவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.