வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மத்தியஅரசு கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி மிக குறைவு: டி.கே.ரங்கராஜன் எம்.பி

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை அரசினர் மேல்நிலைபள்ளியில் டி.கே.ரங்கராஜன் எம்பி, தனது நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20

News image
Updated On :29 ஜனவரி 2013, 1:33 pm

G.Sundararaj

மத்தியஅரசு கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி மிக குறைவு. குறைந்தது 6 சதவீத நிதியை கல்விக்கு ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்பி தெரிவித்தார்.

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை அரசினர் மேல்நிலைபள்ளியில் டி.கே.ரங்கராஜன் எம்பி, தனது நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை மற்றும் ஆய்வுக்கூடம் கட்டி கொடுத்துள்ளார். அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சாந்தா வரவேற்றார். விழாவில் டி.கே.ரங்கராஜன் எம்பி பங்கேற்று கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் ஆய்வுக் கூடத்தை திறந்துவைத்துப் பேசினார்.அவர் பேசியதாவது: பள்ளிக் கட்டடம் கட்ட நான் ஒதுக்கிய பணம், மக்களின் வரி பணம், நான் எனது நிதியில் இருந்து தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, அரியலூர்,கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி கட்டடம் மற்றும் கல்லூரி கட்டடம் மட்டுமே அதிக நிதி ஒதுக்கியுளேன். இது சமுதாயத்திற்கும், நாட்டிற்க்கும் பயன்படும். நான் சாலை போடுவதற்க்கு நிதி ஒதுக்குவதுதில்லை.இந்த ஆண்டு கணித மேதை ராமானுஜம் 125-ம் ஆண்டு. எனவே இந்த ஆண்டில் தில்லை (சிதம்பரம்) பள்ளிகளில் கணித மேதைகளையும், விஞ்ஞானிகளையும், ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்.

விழாவில் சிதம்பரம் வட்டாட்சியர் க.தனசிங், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்டச் செயற்க்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், ஒன்றியச் செயலாளர் சுதாகர், பெற்றோர் ஆசிரியர் சங்கச் தலைவர் தெய்வராஜ், பொருளாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.