விகிதாசார முறையிலான தேர்தலில்தான் கட்சியின் உண்மையான பலத்தை அறிய முடியும்: ஜி.ராமகிருஷ்ணன்
நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய நீரின்றி குறுவை, சம்பா நெற்பயிர்கள் கருகி பாழாகியுள்ளன. டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல்


தற்போதைய தேர்தல் முறையை வைத்து கட்சிகளின் பலத்தை கணிக்க முடியாது. விகிதாசார முறையில் தேர்தல் நடத்தினால்தான் உண்மையான கட்சி பலத்தை அறிய முடியும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் கருத்தாகும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தமிழ் மாநிலக்குழுக்கூட்டம் பைசல் மஹாலில் ஜன.28,29 தேதிகளில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்பி தலைமையில் நடைபெற்றது. மாநிலக்குழுக்கூட்டம் முடிந்த பின்னர் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய நீரின்றி குறுவை, சம்பா நெற்பயிர்கள் கருகி பாழாகியுள்ளன. டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக நிதிஅமைச்சர் தலைமையிலான குழு ஆய்வு செய்த பின்னரும் இதுவரை வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டவில்லை. தமிழகத்தில் 19 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மத்தியஅரசு வேடிக்கை பார்க்காமல் மாநில அரசுக்கு உதவி செய்ய வேண்டும். எனவே மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தை வறட்சி பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என மாநிலக்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது.
டீசல் விலை உயர்வில் இரட்டை விலை முறையை மத்தியஅரசு அறிவித்துள்ளதால் கடும் பாதிப்பு ஏற்படும். தமிழகஅரசு போக்குவரத்து துறைக்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும். பொது போக்குவரத்து திட்டத்தை ஒழித்து தனியார் மயமாகும் ஆபத்து ஏற்படும். வெளிநாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி விலையும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு விலையும் குறைவாகதான் உள்ளது. விலை உயர்வு எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளயைடிக்கதான் வழிவகுக்கும். எனவே டீசல் விலை உயர்வை கைவிட வேண்டும்.
கல்கத்தாவில் ஜன.17,18,19 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தில் பிப்ரவரி மாதம் இறுதியில் தேதி தொடங்கி 4 முனைகளில் 4 குழுக்களாக நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பிப்.24-ம் தேதி ஒரு குழு கன்னியாக்குமரியிலிருந்து பொலிட்பீரோ உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் புறப்பட்டு கேரளா, கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர் வழியாக கர்நாடகாவை சென்றடைகிறது. மற்றொரு குழு மார்ச் மாதம் முதல் வாரத்தில் கலகத்தாவிலிருந்து பிருந்தாகாரட் தலைமையில் புறப்படுகிறது. மற்றக்குழுக்கள் அமிர்தசரஸிலிருந்து புறப்படும் குழுவில் பிருந்தாகாரத் பங்கேற்கிறார், மும்பையிலிருந்து புறப்படும் குழுவில் சீத்தாராம்யெச்சூரி பங்கேற்கிறார். 4 குழுக்கள் பிரசாரம் முடிவுற்ற பின்னர் மார்ச் மாதம் 19-ம் தேதி தில்லியில் பேரணி நடத்தப்படுகிறது. இவையல்லாமல் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள 6 குழுக்கள் அமைக்க மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கடைபிடிக்கக்கூடிய தாராளமய பொருளாதாரக் கொள்கை, அந்நிய நேரடி முதலீடு எதிராக மாற்று பொருளாதார கொள்கையை முன்வைத்தும், மக்கள் பிரச்சனையை முன்வைத்தும் இந்த பிரசார பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
சாதிமோதலை உருவாக்கும் பாமக அனுகுமுறை சரியல்ல: தமிழகத்தில் 1 கோடி பேர் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் பாதிபேர் தலித் சமுதாயத்தினர், பாதி பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். இந்த உழைக்கும் மக்கள் வறட்சி, டீசல் விலை உயர்வு உள்ளிட்ட தங்களுடைய பிரச்சனைகளுக்காக ஒன்றுபட்டு போராடும் நேரத்தில் பிளவுபடுத்தியும், மோதலை உருவாக்கும் பாமகவின் அனுகுமுறையை ஏற்படுத்தி வருவது சரியானதல்ல. டீசல் இரட்டை விலை உயர்வு குறித்து திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வெளியிட்டால் மட்டும் போதாது. மத்தியஅரசின் முடிவை கண்டிக்க வேண்டும். ஏற்கனவே சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு கண்டனம் தெரிவித்த கருணாநிதி, நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...