ஆஸ்திரேலிய பறவை கரூரில் மீட்பு
கரூர் மாவட்டம் மண்மங்கலத்தில் உள்ள பெரியார் சமத்துவபுரம் அருகில் மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததால், மிகப் பெரிய அலகும், இறக்கையும் உடைய பறவை ஒன்று கீழே விழுந்து கிடந்தது. இதுகுறித்து


கரூரில் மின் தாக்கி காயம்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரிய வகை பறவையை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்டம் மண்மங்கலத்தில் உள்ள பெரியார் சமத்துவபுரம் அருகில் மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததால், மிகப் பெரிய அலகும், இறக்கையும் உடைய பறவை ஒன்று கீழே விழுந்து கிடந்தது. இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வனத் துறைக்கு தகவல் அளித்தனர். மாவட்ட வன அலுவலர் சிவஞானம் தலைமையிலான வனக் காவலர்கள் விரைந்து செனறு அந்த பறவையை மீட்டனர். மினசாரம் பாய்ந்து ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளித்தனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கூழைக்கிடா வகையைச் சேர்ந்த பறவை ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு சென்றிருக்கலாம் என வன அலுவலர்கள் தெரிவித்தனர். செல்லும் வழியில் மின் கம்பியில் உட்கார்ந்த போது, மின்சாரம் பாய்ந்து காயமடைந்து கீழே விழுந்துள்ளது. சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, பொன்னணியாறு அணைப் பகுதியில் விடப்படும் என வன அலுவலர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...