தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

வீட்டின் பூட்டை உடைத்து 20சவரன் நகை கொள்ளை

மீஞ்சூர் அடுத்த வல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.  மீஞ்சூர் அடுத்த வல்லூர் மின் நகரில் வசித்து வருபவர் குபேரவல்லி(55). இவருக்கு 3பெண்கள் உள்ளனர். 3பேருக்கும் திருமணம் செய்து

Updated On :6 ஜூலை 2013, 6:26 pm

மீஞ்சூர் அடுத்த வல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.  மீஞ்சூர் அடுத்த வல்லூர் மின் நகரில் வசித்து வருபவர் குபேரவல்லி(55). இவருக்கு 3பெண்கள் உள்ளனர். 3பேருக்கும் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு அவர்கள் வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.  கிழக்கு தாம்பரத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு கடந்த 1-ம் தேதி குபேரவல்லி சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை காலை குபேரவல்லியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் அவருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து குபேரவல்லி வந்து பார்த்தபோது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் 20 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.