அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி
பழனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார்.


பழனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார்.
பழனி தேவேந்திரர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் முருகன்(26). இவர் புதன்கிழமை பழனி -உடுமலை சாலையில் பழனி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். தாளையம் செங்குளம் அருகே வந்து கொண்டிருந்த போது பின்னே அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முருகன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதுகுறித்து தாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ் கொடுத்த புகாரின் பேரில் சாமிநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...