விருதுநகர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு முகாம் வருகிற 20, 22 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.
தமிழகம் முழுவதும் புதிதாக 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அதில், 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.வி.க அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகாசி ரிசர்வ் லைன் அரசு மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி, செம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
எனவே இப்பள்ளிகளில் காலியாக உள்ள 45 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான கலந்தாய்வு முகாம் குறிப்பிட்ட நாள்களில் தங்கம்மாள்-பெரியசாமி நாடார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இதில், வருகிற 20-ம் தேதி மாவட்டத்திற்குள்ளும், 22-ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் என கலந்தாய்வு முகாம் நடத்தப்பட இருக்கிறது. எனவே இக்கலந்தாய்வு முகாமில் பங்கேற்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் காலை 10 மணிக்குள் வந்து பங்கேற்க வேண்டும். இதில், ஏற்கனவே பொது மாறுதல் கலந்தாய்வு முகாமில் பங்கேற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுகத்கு, இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாது.
எனவே மாறுதல் கோரும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் வருகிற 19-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) அமுதவள்ளி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பறக்கும் படையால் ரூ.60,000 பறிமுதல்

திருமலையில் தவெகவுக்கு வாக்கு சேகரிப்பு

20.4.1976: சென்னை மாநகராட்சி பள்ளி 5வது வகுப்புக்கு பொதுத் தேர்வு

விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன் சிறப்பு நேர்காணல்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

