ஆம்பூர் அருகே வடகரை கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரி வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு பாலாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
வடகரையை சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு அனுப்பியுள்ள மனு : ஆம்பூர் தாலுக்கா வடகரை கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. அந்த கடை அமையுள்ள பகுதி வழியாக சுற்றுப்புற 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்று வரும் பொது வழியாகும். மேனிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அந்த வழியை கடந்து தான் செல்ல வேண்டும்.
அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும். தற்போது டாஸ்மாக் கடை அமைய உள்ள பகுதியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் மணியாரகுப்பம் கூட்டு ரோடில் ஏற்கனவே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. எனவே அருகாமையிலேயே மேலும் ஒரு டாஸ்மாக் கடை வடகரை கிராமத்தில் அமைப்பதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். எனவே புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என மனு மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்தார் - 2 என்ன ஆனது?
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார்: ஐபிஎல் நிர்வாகம் தகவல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

