பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

தொழிலதிபரைச் சுட்டு ரூ.10 லட்சம் பறிப்பு புவனேசுவரத்தில் பட்டப்பகலில் துணிகரம்

புவனேசுவரத்தில் நெரிசல் மிக்க வணிக வளாகப் பகுதியில் சனிக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தொழிலதிபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கத்தைப் பறித்துச் சென்றனர்.

News image
Updated On :20 ஜூலை 2013, 5:42 pm

விஜயக்குமார்

புவனேசுவரத்தில் நெரிசல் மிக்க வணிக வளாகப் பகுதியில் சனிக்கிழமை

காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தொழிலதிபர் ஒருவரை

துப்பாக்கியால் சுட்டு அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கத்தைப்

பறித்துச் சென்றனர்.

 இந்துஸ்தான் லீவர் நிறுவனப் பொருள்களின் மொத்த விநியோகஸ்தராக

இருந்து வரும் ஹரிஷ் ராத் என்பவருக்கு இரு குண்டுக் காயங்கள்

ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது

உடல் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. புவனேசுவரம் காளி கோயில் மார்க்கெட் வளாகம் அருகே காலை 11

மணிக்கு இந்த துணிகரச் சம்பவம் நடந்திருக்கிறது. இதன் அருகேதான்

ஹரிஷ் ராதின் அலுவலகமும் உள்ளது. அவர் தனது காரில்

அமர்ந்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அவருடன்

வாய்த் தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர். இதையடுத்து அவரைத்

துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் இருந்த

பணப்பையைப் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டதாக

அருகில் இருந்தவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

 சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அளித்திருத்திருக்கும் அடையாள

விவரங்களை வைத்து அந்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆனால் இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை.

 இது குறித்து காவல் துறை உதவி ஆணையர் பி.கே.பட்நாயக் கூறியது:

 அலுவலகத்தில் காலையில் வசூல் முகவர்களின் கூட்டத்தை

நடத்திவிட்டு அவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு

டெபாசிட் செய்வதற்கு வங்கிக்குப் புறப்படுவதற்காக ஹரிஷ் காரில்

அமர்ந்திருக்கிறார்.

 அப்போது பைக்கில் வந்த இரு நபர்கள் அவரிடம்

செய்துள்ளனர். அதில் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து ஹரிஷை

சுட்டுள்ளார். காரின் கண்ணாடியைத் துளைத்துக்கொண்டு சென்ற குண்டு

அவரது மார்பில் பாய்ந்தது. மற்றொன்று அவரது இடது கையைத்

துளைத்தது. நிலைமையைப் பயன்படுத்தி அவரிடம் இருந்த

பணப்பையைப் பறித்துக்கொண்டு பைக்கில் அவர்கள்

தப்பிச்சென்றுவிட்டனர்.

 நல்ல பருமனான உடலைக்கொண்ட ஹரிஷ் தானாகவே காரின்

கதவைத் திறந்து அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். ரத்தவெள்ளத்துடன்

அவர் வருவதைக் கண்டு அவரது அலுவலக ஊழியர்கள் போலீஸாருக்கு

தகவல் அளித்தனர். தொடர்ந்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு

செல்லப்பட்டார்.

 கொள்ளைதான் இந்த சம்பவத்துக்குப் பின்னணியாக இருப்பதாகத்

தெரிகிறது. முன்விரோதம், தொழில் போட்டியால் இது நடந்ததா என்பது

குறித்தும் விசாரித்து வருகிறோம். மோட்டார் சைக்கிளில் வந்த

நபர்களுக்கு வங்கிக்கு ஹரிஷ் தினமும் சென்றுவரும் நேரம்

தெரிந்துள்ளதால் அவரது அலுவலக ஊழியர்களுக்கு இதில் தொடர்பு

இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று

அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.