47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இளம் மனைவியை தீயிட்டுக் கொன்றதாக கணவர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே சேகல்மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன் (28). விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு தங்கம் (20) என்பவருடன் மூன்றாண்டுகளுக்கு

News image
Updated On :23 ஜூலை 2013, 7:35 am

ரவி

திருத்துறைப்பூண்டி அருகே சேகல்மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன் (28). விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு தங்கம் (20) என்பவருடன் மூன்றாண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த 20ம் தேதி தங்கம் தீ வைத்து எரிந்த நிலையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவசர அவசரமாக அவரது உடலை இறுதிச் சடங்குகள் செய்து எரித்துவிட்டனர். போலீஸாருக்குச் சொல்லாமல் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு விட்டதாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தங்கத்தின் தாயார் மணிமேகலை அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸார் வடிவழகனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.