/

சிதம்பரம் அருகே கீரப்பாளையம் தீ விபத்து: 22 வீடுகள் எரிந்து நாசம்

சிதம்பரம் அருகே கீரப்பாளையம் காந்திநகரில் இன்று காலை செல்வி என்பவரது கூரைவீட்டில் திடீரென தீப்பிடித்தது. தீவிபத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து அருகாமையில் உள்ள வீடுகளுக்கு மள,

News image
Updated On :24 ஜூலை 2013, 8:55 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 22 கூரை வீடுகள் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.

சிதம்பரம் அருகே கீரப்பாளையம் காந்திநகரில் இன்று காலை செல்வி என்பவரது கூரைவீட்டில் திடீரென தீப்பிடித்தது. தீவிபத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து அருகாமையில் உள்ள வீடுகளுக்கு மள, மளவென தீ பரவி சுமார் 22 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமுற்றன. தகவல் அறிந்த சிதம்பரம், பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளிலிருந்து 4 தீயணைப்பு மீட்புத்துறை வாகனங்கள் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

அப்போது சிதம்பரத்திலிருந்து சென்ற ஒரு தீயணைப்பு வாகனம் பழுதாகி நின்றுபோனதால் மீதமுள்ள 3 வாகனங்களை கொண்டு தீயணைப்பு மீட்புத்துறையினர் தீயை அணைத்தனர். தீவிபத்தின் போது சிலிண்டர் வெடித்து அதன் பாகம் பறந்து சென்று அருகாமையில் உள்ள புவனகிரி பஸ்நிலையம் அருகே நின்று கொண்டிருந்த வேன் டயரில் விழுந்து சேதப்படுத்தியது. இத்தீவிபத்தில் சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான பொருள்கள் மற்றும் உடமைகள் எரிந்து சேதமுற்றதாக கூறப்படுகிறது. தீவிபத்து குறித்து புவனகிரி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.