அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

நீதிமன்ற புறக்கணிப்பைத் தவிர்க்க வேண்டும் : நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன்

வழக்குரைஞர்கள் - காவல் துறையோடு பிரச்னையில் ஈடுபட்டு நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதை இனி வருங்காலங்களில் தவிர்க்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் அறிவுரை வழங்கினார்.

Updated On :27 ஜூலை 2013, 10:05 am

வழக்குரைஞர்கள் - காவல் துறையோடு பிரச்னையில் ஈடுபட்டு   நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதை இனி வருங்காலங்களில் தவிர்க்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் அறிவுரை வழங்கினார்.

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகில் நீதிமன்ற வளாகத்தில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் தொடக்க விழா வழக்குரைஞர் சங்க அரங்கத்தில்  சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் பங்கேற்று பேசியதாவது: விருதுநகர் என்றாலே எளிமையான வாழ்ககை நடத்திய பெருந்தலைவர் காமராஜரின் நினைவு வரும். அவர் பிறந்த ஊரில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தை தொடங்கி வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக விழா நடைபெறும் போது எல்லோரும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவார்கள். ஆனால், இந்த நீதிமன்றம் குற்றங்களை குறைப்பதற்காக திறக்கப்படும் நீதிமன்றம் ஆகும்.

எந்த நோக்கத்திற்காக இந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளதோ, அந்த நோக்கம் நிறைவேற வேண்டும். காவல் துறையினரும் இதுவரையில் நில அபகரிப்பு மனுக்கள் மீது விசாரணை செய்து நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ள காவல் துறையின் பணியை பாராட்டுகிறேன். பொதுவாக பட்டா, சிட்டா, அடங்கல், பத்திரம் அடங்கிய ஆவணங்கள் இருந்தால் தான் உரிமை கொண்டாட முடியும். ஆனால், ஒரு சிலர் மற்றவர்களின் இடங்களை அனுபவித்து, அதன் காரணமாகவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதுபோன்ற இடங்களின் மதிப்பு கூடும் பொழுதுதான் குற்ற நடவடிக்கை ஏற்படுகிறது. இதுபோன்ற வழக்குகளை முழுமையாக விசாரித்து நடுநிலைமையுடன் தீர்ப்பு வழங்க வேண்டும்.

நில அபகரிப்பு பிரிவு தொடங்கியது முதல் இதுவரையில் காவல் துறை மூலம் ரூ. 13.15 கோடி நிலங்கள் மீட்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார். 20 சதவீதம் வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளதால் விசாரணை செய்ய முடியாத நிலையிருக்கிறது. மேலும், வழக்குரைஞர்கள் அனைவரும் தங்கள் வாதத்திறமைகளை நீதிமன்றத்தில் தான் நிலை நிறுத்த வேண்டும். அதை தவிர்த்து காவல் துறையின் காவலர்கள் மத்தியில் வாதத்திறமையை காட்டுவது முறையானது அல்ல. இதுபோன்ற சம்பவங்கள் காவல் துறைக்கும் -நீதித்துறைக்கும் ஒரு சில நேரங்களில் மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதையே காரணமாக வைத்து நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், நீதி மன்ற நடவடிக்கைகள் மற்றும் நடுவர்களின் வழக்கு விசாரணை இலக்குகள், கட்சிக்காரர்கள் ஆகியோர் பாதிக்கப்படுகிறார்கள். அதனால், இனி வருங்காலங்களில் வழக்குரைஞர்கள் நீதி மன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று உயர்நீதி மன்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.