சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தேரோட்டம்! நாளை தீமிதி உற்சவம்
பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன்கோயில் ஆடி மாத உற்சவம் ஜூலை 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 28-ம் தேதி இன்று தேர் திருவிழா நடைபெற்றது. தேர்


சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரோட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.
பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன்கோயில் ஆடி மாத உற்சவம் ஜூலை 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 28-ம் தேதி இன்று தேர் திருவிழா நடைபெற்றது. தேர் கீழசன்னதி நிலையிலிருந்து புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக மீண்டும் கீழசன்னதியை அடைந்தது. பின்னர் மாலை ஸ்ரீமாரியம்மன் தேரில் இருந்து இறங்கி கோயிலுக்கு சென்றார். தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீமாரியம்மனை வழிபட்டனர்.
ஜூலை 29-ம் தேதி நாளை திங்கள்கிழமை காலை 5 மணி முதல் அங்கபிரதட்சிணம், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிரார்த்தனை ஆகியவையும், காலை 9 மணிக்கு தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு மேல் 10 மணிக்கும் சோதனை கரகம், அலகு தரிசனம் நிகழ்ச்சியும், பகல் 1 மணிக்கும் மேல் 2 மணிக்குள் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது. ஜூலை 31-ம் தேதி மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் என்.வீராசாமிபிள்ளை, அறங்காவலர்கள் என்.கலியமூர்த்தி, என்.செல்லத்துரை ஆகியோர் செய்துள்ளனர்.
இன்று போக்குவரத்து மாற்றம்: தீமிதி உற்சவத்தை முன்னிட்டு திங்கள்கிழமை பேருந்துகள் பஸ்நிலையத்திற்கு செல்ல முடியாததால், தெற்குவீதி, கீழவீதி சந்திப்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கடலூர் மற்றும் சீர்காழி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஆர்.மலைச்சாமி தெரிவித்தார். மேலும் சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர், ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...