/

முதலை கடித்து இறந்தவருக்கு இழப்பீடு வழங்க எம்எல்ஏ கோரிக்கை

அந்த கடிதத்தில் சிதம்பரம் அருகே பெராம்பட்டு ரயிலடி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியான ஜோதிராஜன் (55) கடந்த ஜூலை 28-ம் தேதி பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை

News image
Updated On :30 ஜூலை 2013, 12:44 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே முதலை கடித்து இறந்தவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் சிதம்பரம் அருகே பெராம்பட்டு ரயிலடி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியான ஜோதிராஜன் (55) கடந்த ஜூலை 28-ம் தேதி பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை கடித்து இறந்துள்ளார். இறந்து போன ஜோதிராஜன் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கி அவரது குடும்பத்தை பாதுகாத்திட கோருகிறேன். மேலும் பழைய கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் முதலைகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளதால், அடிக்கடை கால்நடைகளும், மனிதர்களும் உயிரிழப்புக்கு ஆளாகி வரும் சோகமான நிலை தொடர்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும், பழைய கொள்ளிடம் பகுதியில் 11-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் முதலைகளுக்கு இரையாகி உள்ளனர். அதுபோன்று மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் முதலைகளின் இழுத்துச் செல்லப்பட்டு இறந்துள்ளன. இந்த ஆபத்திலிருந்து பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாத்திடும் வகையில் மேற்கண்ட முதலைகளை பிடித்து வேறு இடத்தில் கொண்டு விட வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் வனத்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் உயிரிழப்புகள் தொடர் கதையாகி வருகின்றன. எனவே முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி, பழைய கொள்ளிடம் ஆற்றில் உள்ள முதலைகளை பிடித்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.