சிதம்பரத்தில் ஆக.3,4 தேதிகளில் சேக்கிழார் செந்தமிழ் திருவிழா
ஆக.3-ம் தேதி மாலை மு.பச்சையமுத்துவின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. மெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார்.


சிதம்பரத்தில் தமிழ்ப்பேரவை சார்பில் சேக்கிழார் செந்தமிழ்த் திருவிழா கீழரதவீதி ராசி திருமண மண்டபத்தில் ஆக.3,4 தேதிகளில் நடைபெறுகிறது.
ஆக.3-ம் தேதி மாலை மு.பச்சையமுத்துவின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. மெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார். பேராசிரியர் ஆனந்தநடராஜ தீட்சிதர் வாழ்த்துரையாற்றுகிறார். கோவை சிவப்பிரகாச சுவாமிகள், இலங்கை செயராசு ஆகியோர் இலக்கிய பேரூரையாற்றுகின்றனர். பழ.கருப்பையா எம்எல்ஏ இலக்கிய பேரூரையாற்றுகிறார். ராம.சின்னராசு நன்றி கூறுகிறார்.
ஆக.5-ம் தேதி விழாவில் ஆதி.சிவராமவீரப்பன் வரவேற்கிறார். த.அகரமுதல்வன் ஆன்மீக பேரூரையாற்றுகிறார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சனார் சிறப்புரையாற்றுகிறார். பின்னர் 'சேக்கிழாரின் வாழ்வியில் சிந்தனைகள்' குறித்து சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அவ்வை து.நடராஜன், முனைவர் ரா.அன்பழகன், புலவர் தி.பொன்னம்பலம், புலவர் பனசை மூர்த்தி, பேராசிரியர் மு.சிவச்சந்திபன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். விழா ஏற்பாடுகளை தமிழ்ப் பேரைவ தலைவர் கவிஞர் ராம.ஆதிமூலம் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...