/

பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது 

விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ்(எ) சுக்குசுரேஷ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  விழுப்புரம்-கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(29). இவர் மீது ஒரு கொலை வழக்கும், கொலை முயற்சி மற்றும் பல வழக்குகள் உள்ளன.

News image
Updated On :1 ஜூன் 2013, 5:39 pm

ச.​ கார்த்​தி​கே​யன்

விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ்(எ) சுக்குசுரேஷ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

 விழுப்புரம்-கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(29). இவர் மீது ஒரு கொலை வழக்கும், கொலை முயற்சி மற்றும் பல வழக்குகள் உள்ளன.

 சென்ற ஏப்ரல் மாதம் 12-ம் தேதி இவரைப் பிடிப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் சென்றுள்ளார். அப்போது இவரை அரிவாலால் வெட்டிவிட்டு சுரேஷ் தப்பியோடி உள்ளார். 

 இச்சம்பவத்துக்கு மறுநாள் இவரைப் போலீஸார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 இந்நிலையில் சுரேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் பரிந்துரை செய்தார்.

 இதையடுத்து அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் வெள்ளிக்கிழமை இரவு பிறப்பித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.