ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

வேகத்தடையில் நிலைகவிழ்ந்து விவசாயி பலி

சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மார்டின் (55). விவசாயியான இவருக்கு 8 குழந்தைகள் உள்ளனர். நேற்று அப்பகுதி டயசீஸ்

Updated On :4 ஜூன் 2013, 3:56 am

சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மார்டின் (55). விவசாயியான இவருக்கு 8 குழந்தைகள் உள்ளனர். நேற்று அப்பகுதி டயசீஸ் தேர்தல் (பெருமண்டல தேர்தல்) நடைபெற்ற நிலையில், அவரது ஆதரவாளர் வெற்றி பெற்றாராம். இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட மது அருந்திய அவர், பின்னர் சாத்தான்குளம் நோக்கி தனது மொபட் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். சாத்தான்குளம் அருகே அமுதுன்னாகுடி பகுதியில் வேகத் தடையைக் கடந்த போது, நிலை தடுமாறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். பின்னர் பாளையங்கோட்டை மேட்டுத்திடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.