/

டிராக்டர் கவிழ்ந்து 30 பேர் காயம்

திருக்கோவிலூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளர்கள் 30 பேர் வியாழக்கிழமை காயமடைந்தனர்.

News image
Updated On :6 ஜூன் 2013, 5:35 pm

ச.​ கார்த்​தி​கே​யன்

.திருக்கோவிலூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளர்கள் 30 பேர் வியாழக்கிழமை காயமடைந்தனர்.

திருக்கோவிலூரை அடுத்த காட்டுஎடையார் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 30 பேர், முனிவாழை கிராமத்துக்கு கரும்பு வெட்டுவதற்கு சென்றனர். பின் வேலை முடிந்து டிராக்டரில் வீட்டுக்கு வந்தனர்.

அப்போது காட்டுஎடையார் கூட்டுச்சாலை அருகே எதிர்பாராதவிதமாக டிராக்டர் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவத்தால் டிராக்டரில் வந்த தொழிலாளர்கள் 30 பேர் காயமடைந்தனர். இதையடுத்து இவர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் தண்டபாணி மகள் விஜயசாந்தி(20), கண்ணன் மனைவி சேவாத்தாள்(40) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதுகுறித்து ரிஷிவந்தியம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.