இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நஷ்ட ஈடு வழங்காததால் ரயில் நிலையத்தில் ஜப்தி முயற்சி

கரூர் மாவட்டம், ராமேசுரவம்பட்டியைச் சேர்ந்த செல்லப்பன், ராமாயி அம்மாள்  இவர்களுடைய நிலம் கரூர், சேலம் அகல ரயல் பாதைக்காக ஆர்ஜிதப்படுத்தப்பட்டது. இதற்காக அரசு 1 சென்டுக்கு ரூ. 360 அளிக்க முன்

Updated On :7 ஜூன் 2013, 3:57 pm IST

கரூர் சேலம் அகல ரயில்பாதை அமைக்க நிலம் அளித்த 2 பேருக்கு நஷ்ட ஈடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவுபடி, இன்று கரூர் ரயில் நிலையத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், ராமேசுரவம்பட்டியைச் சேர்ந்த செல்லப்பன், ராமாயி அம்மாள்  இவர்களுடைய நிலம் கரூர், சேலம் அகல ரயல் பாதைக்காக ஆர்ஜிதப்படுத்தப்பட்டது. இதற்காக அரசு 1 சென்டுக்கு ரூ. 360 அளிக்க முன் வந்தது. ஆனால், அரசு நிர்ணயித்த நஷ்ட ஈட்டுத் தொகை குறைவாக உள்ளதாகவும், உரிய நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி, கரூர் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2011-ம் ஆண்டில் செல்லப்பனுக்கு ரூ. 54 லட்சமும், ராமாயி அம்மாளுக்கு ரூ. 77 லட்சமும் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.  ஆனால், ரயில்வே நிர்வாகம் நீதிமன்ற உத்தரவுபடி நஷ்ட ஈட்டை வழங்வில்லை. இதையடுத்து, செல்லப்பன், ராமாயி அம்மாள் ஆகியோர் நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றுக்கோரும் மனுவைத் தாக்கல் செய்தனர். கடந்த ஏப்ரல் மாதம் கரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் நஷ்ட ஈடு வழங்காததால், ரயில் நிலையத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து, இன்று நீதிமன்ற அமீனாக்கள் நந்தகுமார், விஜயகுமார், காதப்பாறை கிராம நிர்வாக அலுவலர் சிவானந்தன் மேலும், வழக்குத் தொடர்ந்த செல்லப்பன், ராமாயி அம்மாள் ஆகியோர் ரயில் நிலையத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய வந்தனர்.ரயில் நிலைய மேலாளர் சுந்தரராஜன் வெளியில் சென்றிருந்தார். ரயில் நிலைய அலுவலர் மனோஜ்குமாரிடம் ஜப்தி செய்ய வந்துள்ளதாக தெரிவித்தனர். உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து ஒரு சில நாள்களில் உரிய பதில அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஜப்தி செய்ய வந்தவர்கள் திரும்பிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.