விருதுநகர் அருகே மர்மமான முறையில் 15 நாய்கள் உயிரிழந்தது குறித்து சூலக்கரை காவல் நிலைய போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ளது கூத்தியார்குண்டு கிராமம். இப்பகுதியில் தெருநாய்கள் அதிகம் சுற்றித் திரிந்து வந்தது. இந்நிலையில் கூரைக்குண்டு காட்டுப்பகுதியிலும், சாலையோரத்திலும் 15 நாய்கள் வரையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ளவர்கள் விலங்கின ஆர்வலர்களான சுனிதா கிறிஸ்டி மற்றும் முருகன் உள்ளிட்டோரிடம் தெரிவித்தனர். அதையடுத்து, உடனே கிராமத்தில் உள்ளவர்களிடம் விசாரணை செய்தனர்.
அப்போது, நாய்கள் தொந்தரவு அதிகமாக இருப்பதால் உணவில் விஷம் வைத்து கொண்றிருக்கலாம் என தெரிய வந்தது. இது தொடர்பாக சூலக்கரை காவல் நிலையத்தில் விலங்கின ஆர்வலர் முருகன் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த நாய்களுக்கு விஷம் வைத்த மர்ம நபர்கள் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! நாளை வைகையில் எழுந்தளுருகிறார்!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

