கரூரில் இடப் பிரச்னையைத் தீர்க்கக்கோரி, போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி முன்னிலையில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி பகுதி நேர நூலகம் திறப்பு விழா, குடிநீர் திட்டப் பணிகள் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இன்று கலந்து கொண்டார். சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைச்சர் கார் சென்றபோது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு, அதிமுக கொடியுடன் அமைச்சரை நெருங்க முயன்றார்.இதனால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சரின் பாதுகாப்புக்குச் சென்ற போலீஸார் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தீக்குளிக்க முயன்ற நபர் ஆண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்த மயில்சாமி (38). மர கடைசல் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய பாட்டி மருதாயிக்கும், பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக பிரச்னை உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அந்தப் பகுதிக்கு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் முன்னிலையில், மயில்சாமி, உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு, பிரச்னையத் தீர்த்து வைக்க வேண்டும் என முழக்கம் எழுப்பியுள்ளார். இதையடுத்து, கரூர் நகரப் போலீஸார் தற்கொலைக்கு முயன்றதாக மயில்சாமி மீது வழக்குப் பதிந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் கலங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


