மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்த சமூகப்பணியாளர், தொண்டு நிறுவனங்களுக்கு பரிசு பெற விண்ணபபங்கள் வரவேற்பு 

ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்து வருகிறவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் தேர்வு குழு மூலம் தேர்வு செய்து சுதந்திர தின விழாவில் முதல்வரால் விருதுகள்

Updated On :12 ஜூன் 2013, 12:08 pm

விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய சமூகப்பணியாளர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து   விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்து வருகிறவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் தேர்வு குழு மூலம் தேர்வு செய்து சுதந்திர தின விழாவில் முதல்வரால் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிகழ் ஆகியவை அளிக்கப்பட இருக்கிறது.

இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், சேவை புரிந்த தொண்டு நிறுவனங்களுக்கு 10 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு சேவை புரிந்த சமூகப்பணியாளர் மற்றும் மருத்துவருக்கு தலா 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம தங்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்பட இருக்கிறது.

அதேபோல், நிகழாண்டில் சிறப்பாக பணியாற்றி வருகிறவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், ஆட்சியர் வளாகம், விருதுநகர் என்கிற முகவரிக்கு வருகிற 28-ம் தேதிக்குள் அஞ்சலிலோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்கலாம்.  எனவே மொத்த விண்ணப்பங்களையும் தேர்வு குழு மூலம் பரிசீலனை செய்து தேர்வு செய்யப்பட்டு கௌரவம் அளிக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.