விருதுநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் வருகிற 23-ம் தேதி ராமமூர்த்தி சாலையில் உள்ள கந்தசாமி-ராஜம்மாள் தனியார் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் கே.பி.எஸ்.பாண்டியன் தலைமை வகிக்கிறார். இதில், நானும்(கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்) மற்றும் மாநில திமுக நெசவாளர் அணித்தலைவரும், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசும் பங்கேற்க இருக்கிறோம். இதில், கலைஞரின் பிறந்த நாள் விழா மற்றும் மக்களவை தேர்தல் நிதியளிப்பு பொதுக் கூட்டம் வருகிற 29ம் தேதியும், இளைஞர் அணி ஆய்வு கூட்டம் 30-ம் தேதியும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து திமுக நிர்வாகிகளிடையே விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது.
அதனால், இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர், நகர, ஒன்றியக் கழக செயலாளர்கள், இளைஞர் அணி மற்றும் கழக பிற அணிகளின் மாவட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழக அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கட்டயாம் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.