மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து ஒருவர் பலி
பழனி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து ஒருவர் பலியானார்.


பழனி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து ஒருவர் பலியானார்.
பழனி புதுநகரை சேர்ந்தவர் மனோகரன் மகன் சுரேஷ்கண்ணா(42). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். பழனி-தாராபுரம் சாலையில் தொப்பம்பட்டி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி முன்பு இருந்த வேகத்தடையில் வேகமாக ஏறியபோது மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக 108 வாகனம் மூலமாக பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்கு மதுரை கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்து போனார். இதுகுறித்து அவரது சகோதரர் மகேந்திரன்(44) கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...