புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு?; ஜூன் 21 செயற்குழு முடிவு செய்யும்: பாமக அன்புமணி

மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து ஜூன் 21ல் சென்னையில் கூடவுள்ள பாமக.வின் செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்  கூறினார்.

News image
Updated On :19 ஜூன் 2013, 7:39 am

முருகன்

மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து ஜூன் 21ல் சென்னையில் கூடவுள்ள பாமக.வின் செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்  கூறினார்.

பா.ம.க. நடத்தும் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அன்புமணி ராமதாஸ், பாமகவின் திருமண இல்லம் ஒன்றில், கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 

வரும் 2014ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும். தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்ஹ்து, வரும் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். சென்னையில் வரும் ஜூன் 21ம் தேதி இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெறும்.

பா.ம.க. மீது தமிழக அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். திமுக அதிமுகவுடன் இனி எக்காலத்தில் கூட்டணி வைக்கப் போவதில்லை. தமிழகத்தில் கொலை கொள்ளைகள் அதிகரித்து விட்டன என்று கூறினார் அன்புமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.