தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மானாமதுரையில் அரசு ஆவணங்களை பதுக்கிய பத்திர எழுத்தர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசு ஆவணங்களை பதுக்கி வைத்திருந்ததாக பத்திர எழுத்தரை போலீஸ் டி.எஸ்.பி வெள்ளத்துரை கைது செய்தார்.

News image
Updated On :21 ஜூன் 2013, 3:56 am

யுகன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசு ஆவணங்களை பதுக்கி வைத்திருந்ததாக பத்திர எழுத்தரை போலீஸ் டி.எஸ்.பி வெள்ளத்துரை கைது செய்தார்.

மானாமதுரையைச் சேர்ந்தவர் பத்திர எழுத்தர் வேல்முருகன், இவர் ஆனந்தவல்லி அம்மன் கோயில் பின்புறம் அலுவலகம் வைத்து  பத்திரங்கள் எழுதிக் கொடுத்து வருகிறார். பத்திர எழுத்தர் வேல்முருகன் மீது ஏற்கனவே மானாமதுரை டி.எஸ்.பி வெள்ளத்துரை கவனத்துக்கு புகார்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது முன்னிலையில் நகரில் ஆனந்தவல்லி அம்மன் கோயில் பின்புறம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது  வேல்முருகன் தனது அலுவலக கட்டிடத்துக்கு ஆவணங்கள் இருப்பதாகக்கூறி டி.எஸ்.பி வெள்ளத்துரையிடம் அரசு ஆவணத்தை காண்பித்தார்.

இதையடுத்து அரசு அலுவலகங்களில் மட்டும் பயன்படுத்தும் ஆவணப் புத்தகத்தை பதுக்கி வைத்திருந்ததாக வேல்முருகனை டி.எஸ்.பி வெள்ளத்துரை கைது செய்தார். பின்னர் மானாமதுரை காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் போஸ் புகாரின்படி வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் ரிமாண்டுக்கு அனுப்பப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.