மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த 323 விசைத்தறி தொழிலாளர்கள் கைது

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் சில வாரங்களாக தொடர்ந்து பணிக்குச் செல்லாமல் போராடி வருகின்றனர். இவர்களுக்கு இதுவரையில் 1 மீட்டர் மருத்துவ

News image
Updated On :24 ஜூன் 2013, 10:19 am

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த விசைத்தறி தொழிலாளர்கள் 323 பேரை ரயில் நிலையம் முன்பு மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் சில வாரங்களாக தொடர்ந்து பணிக்குச் செல்லாமல் போராடி வருகின்றனர். இவர்களுக்கு இதுவரையில் 1 மீட்டர் மருத்துவ துணியை உற்பத்தி செய்ய 16 பைசா என்கிற அளவில் வழங்கப்பட்டு வந்த நிலையில், இதை கூடுதலாக  23-பைசாவாக உயர்த்தி வழங்க வேண்டும். போனஸ் வழங்கவும், விடுப்பு நாளில் ஊதியம் உள்ளி்ட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி மருத்துவ துணி உற்பத்தி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் மாத்தூரன் தலைமையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பதால் ராஜபாளையத்திலிருந்து-விருதுநகர் வரையில் ரயிலில் வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக தொழிலாளர்கள் வந்தனர். எந்த விதமான அனுமதியும் இல்லாமல் முற்றுகையிட செல்லும் தகவலறிந்து மேற்கு காவல் நிலைய போலீஸார் ரயில் நிலைய வாசலிலேயே தலைவர் மாததூரன் தலைமையில் தொழிலாளர்கள் 323 பேரையும் டி.எஸ்.பி.சுலைமான் தலைமையில் போலீஸார் கைது செய்தனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.