சிதம்பரம் அருகே கடலில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்களைக் காணவில்லை. அவர்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே திங்கள்கிழமை மதியம் கடலில் குளிக்கச் சென்ற நெய்வேலியைச் சேர்ந்த மூன்று மாணவர்களை காணவில்லை. தீயணைப்புத்துறையினர் மற்றும் மீனவர்கள் அம்மாணவர்களை தேடி வருகின்றனர்.
நெய்வேலி வட்டம் 27-ஐ சேர்ந்த காசிநாதன் மகன் கலையரசன் (18), வட்டம் 18-ஐ சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் செபஸ்டியன் (18), வட்டம் 5-ஐ சேர்ந்த இளங்கோ மகன் ஆதர்ஷ் (18). இவர்கள் மூவரும் திங்கள்கிழமை ஒரே மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் அருகே உள்ள பெரியகுப்பம் பகுதி கடற்கரைக்கு வந்துள்ளனர்.
பின்னர் மோட்டார் சைக்கிள் அருகே செல்போன்கள், உடைகள், காலணிகளை வைத்துவிட்டு கடலில் குளிக்கச் சென்றனர். ஆனால் கடலில் குளித்த அவர்கள் நீண்ட நேரமாகியும் கரைக்கு திரும்பவில்லை. இது குறித்து ஊர்மக்கள் போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்புத்துறையினரும், மீனவர்களும் கடலில் அம்மாணவர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

