நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விஜய் சிங்லே சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :28 ஜூன் 2013, 8:41 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விஜய் சிங்லே சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று மதியம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து திருவண்ணாமலை ஆட்சியருக்கு பேக்ஸ் மூலம் பணியிட மாற்றம் குறித்த அறிவிப்பு வந்தது.

அப்போது, கல்வித் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் இருந்த ஆட்சியருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கூட்டத்தை மேற்கொண்டு நடத்துமாறு கல்வித் துறை அதிகாரிகளிடம் கூறிவிட்டு அவர் கிளம்பினார்.

இதையடுத்து இன்று விஜய் சிங்லே மாவட்ட வருவாய் துறை அலுவலரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.

இதுவரை மதுராந்தகம் பகுதியின்  துணை ஆட்சியராக இருந்த ஞானசேகரன் ஐஏஎஸ் பதவி உயர்வு பெற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.