கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

லாரியின் பின்னால் மோதி பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் உள்ளிட்ட இருவர் சாவு

திருமங்கலம் அருகே சுவாமிமல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(18).இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இரண்டாமாண்டு பிகாம் பாடப்பிரிவில் படித்து வருகிறார்.இவரும் சுவாமிமல்லம்பட்டியைச்

Updated On :28 ஜூன் 2013, 6:29 pm IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இன்று ராஜபாளையம் சாலையில் லாரியின் பின்னால் மோதி பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் உள்ளிட்ட இருவர் பலியானார்கள்.

திருமங்கலம் அருகே சுவாமிமல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(18).இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இரண்டாமாண்டு பிகாம் பாடப்பிரிவில் படித்து வருகிறார்.இவரும் சுவாமிமல்லம்பட்டியைச் சேர்ந்த ராமனாதன் என்பவரும் தங்கள் ஊருக்கு மோட்டார் பைக்கில் சென்றனர்.மோட்டார் பைக்கை சிலம்பரசன் ஓட்டிச் சென்றார்.திருமங்கலத்தைக் கடந்து ராஜபாளையம் சாலையில் நான்குவழிச்சாலையின் கீழ்புறம் உள்ள சாலையில் பைக் சென்ற போது முன்னால் சென்ற லாரி திடீரென இணைப்புச் சாலையில் திரும்பியது.இதனால் எதிர்பாராதவிதமாக மோட்டார் பைக் லாரியின் பின்புறம் மோதியது.

இதில் பைக்கை ஓட்டிச் சென்ற சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.ராமனாதன் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார்.திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.