மதுரை வந்தது பிரவீண் உடல்


உத்தர்கண்ட் மாநிலத்தில் மீட்பு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர் பிரவீண் உடல், இன்று காலை மதுரை வந்தது. அவரது உடல் நேற்றே கொண்டு வரப்படுவதாக திட்டமிருந்தது. ஆனால், மதுரை விமான நிலையம் சர்வதேச அளவில் செயல்பட்டாலும், இரவு 9 மணி அளவில் மூடிவிடுவதாகப் புகார் கூறப்படுகிறது. இதன் காரணத்தால், அவரது உடல் இன்று காலை கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பிரவீண் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசின் சார்பிலான ரூ. 10 லட்சம் காசோலையினை ஆட்சியரும் அமைச்சரும் அவரது குடும்பத்தாரிடம் வழங்கினர். மதுரை டி.வி.எஸ் நகரில் உள்ள வீட்டுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...