தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மனைவியை எரித்து கொல்ல முயன்றதாக உப்பளத் தொழிலாளி கைது

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகேயுள்ள தேவிநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அய்யம்மாள் (37). இருவரும் உப்பளத்தில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இந்நிலையில்,

News image
Updated On :29 ஜூன் 2013, 1:56 pm

இன்பராஜ்

தூத்துக்குடியில் மனைவியை எரித்துக் கொல்ல முயன்றதாக உப்பளத் தொழிலாளி இன்று கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகேயுள்ள தேவிநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அய்யம்மாள் (37). இருவரும் உப்பளத்தில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தம்பதியிடையே அடிக்கடை தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், அய்யம்மாள் வீட்டில் இருந்தபோது வெள்ளிக்கிழமை இரவு வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய கணேசன் திடீரென சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து அய்யம்மாள் மீது ஊற்றி தீவைத்ததாகக் கூறப்படுகிறது.

தீக்காயம் அடைந்த அய்யம்மாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த முத்தையாபுரம் போலீஸார் மனைவியை எரித்துக் கொல்ல முயன்றதாக கணேசனை இன்று கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.