சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் புல மாணவர்கள் இன்று இலங்கைக்கு எதிராக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக அறிவியல் மற்றும் கலை புல மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இலங்கை அதிபர் ராஜபட்சவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிறகு அங்கிருந்து ஊர்வலமாக சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்த மாணவர்கள், ஐ.நா.வின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும், இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்த
திருச்சி - சென்னை சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். பிறகு, சோழன் விரைவு ரயில் 15 நிமிடம் காலதாமதமாக 12.50க்கு புறப்பட்டுச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குறுதிகூட கிடைக்காத மக்கள்!

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

