திருக்கோவிலுர்: திடீர் மழையில் நனைந்து 15 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்
திருக்கோவிலூர் அருகே பெய்த திடீர் மழையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 ஆயிரம்


திருக்கோவிலூர் அருகே பெய்த திடீர் மழையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகம். பொதுவாக முதல் நாள் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகள் 24 மணி நேரத்தில் வெளியே சென்றுவிட வேண்டும். ஆனால், வியாபாரிகளின் அடாவடியால், விவசாயிகளின் நெல்மூட்டைகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் வளாகத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பிரித்து சோதனையும் செய்துள்ளனர் அதிகாரிகள். இந்நிலையில், எதிர்பாராமல் பெய்த திடீர் மழையினால் அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் பெருமளவில் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் தங்கள் நெல்மூட்டைகளுக்கு தகுந்த விலை தரப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...