விருதுநகர் அருகே போலி ஆவணம் தயார் செய்து ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மீது தொழிலதிபர் புகார் செய்துள்ளார்.
இது தொடர்பாக விருதுநகர் நில அபகரிப்புத் தடுப்பு பிரிவு போலீஸார் தரப்பில் கூறியாதவது: சென்னை கீழக்கட்டளையைச் சேர்ந்த நவமணிஜோதி(40). இவர் சென்னையில் தொழிலதிபராக இருந்து வருகிறார். இவரது சொந்த ஊரன சிவகாசி அருகே ஈஞ்சார் கிராமத்தில் 40 ஏக்கர் நிலம் உள்ளதாம்.
இதே பகுதியைச் சேர்ந்த இவரது சகோதரி முருகேஸ்வரிக்கும், சகோதரர் முத்துக்குமாருக்கும் தலா 15 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில், நவமணிஜோதியும், அவரது சகோதரரி ஆகியோரின் நிலத்தை பராமரிக்கும் பொறுப்பை முத்துக்குமாரிடம் ஒப்படைத்து, பவர் ஆவணமும் எழுதிக் கொடுத்திருந்தாகளாம். அதையடுத்து, தாங்கள் பொறுப்பில் கொண்டு வருவதற்காக கடந்த ஆண்டு பவரையும் ரத்து செய்தார்களாம்.
இதற்கிடையே முத்துக்குமார் மனைவியான உமாமகேஸ்வரியின் பெயருக்கு போலியான ஆவணம் மூலம் 30 ஏக்கரை கிரையம் செய்து மோசடி செய்துள்ளார். மேலும், மீதமுள்ள நிலத்தை சிவகாசி சிதரம்பரராஜன், வெம்பக்கோட்டை ராமன், சாட்சியாபுரம் பரமன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு வீட்டுமனைகளாகளவும் விற்பனை செய்துள்ளார். இது குறித்து தாங்கள் நிலங்களை பொறுப்பேற்க வரும் போது மோசடி செய்ததை அறி்ந்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இது தொடர்பாக விருதுநகர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸாரிடம் நவமணிஜோதி புகார் செய்தார். அதன் பேரில் தொழிலதிபரின் சகோதரர் முத்துக்குமார், அவரது மனைவி உமாமகேஸ்வரி உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும், மோசடி செய்யப்பட்ட சொத்துக்களின் ரூ.1 கோடி மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

