காவல்நிலையம் முன்பு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட காவலர் கைது
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் (27). இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில்


காட்டுமன்னார்கோயில் காவல் நிலையம் முன்பு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சிறப்பு காவல்படை காவலர் ஒருவரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் (27). இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் காவலராக பணியாற்றுகிறார். சொந்த ஊருக்கு வந்த காவலர் தமிழ்ச்செல்வன் நேற்று(செவ்வாய்க்கிழமை) குடிபோதையில் காட்டுமன்னார் கோயில் காவல் நிலைய சுற்றுச்சுவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். அதனை பெண் போலீஸ்காரர் ஒருவர் தட்டிக்கேட்டபோது அவரை ஆபாசமாக திட்டியுள்ளார். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனையும் திட்டியுள்ளார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீஸார் சிறப்பு காவல்படை காவலர் தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...