புவனகிரி அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற் பயிருக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியத்தில் உள்ள மஞ்சக்கொல்லை, மிராளுர், வாண்டையாங்குப்பம், வத்தராயன்தெத்து, சீயப்பாடி, கிளாவடிநத்தம் ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் போதிய மின்சாரம் இன்றியும், நீரின்றியும் நெற்பயிர்கள் காய்ந்து போனது. காய்ந்து போன பயிர்களை மாடு மேய்ந்து விட்டதாலும், வைக்கோலுக்காக அறுவடை செய்ததாலும் வேளாண் அதிகாரிகள் வறட்சி நிவாரணப் பட்டியலில் அந்நிலங்களை சேர்க்கவில்லை. எனவே விடுபட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புவனகிரி அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தலிங்கம், வள்ளலார் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில் கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் காமராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜி.மாதவன், ஒன்றியச் செயலாளர் இராமலிங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் ஆதிமூலம், தலைவர் பாபு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியலில் பங்கேற்றனர். தகவல் அறிந்த புவனகிரி வேளான் அதிகாரி ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் நந்திதா மற்றும் போலீஸார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தொடர் பிரச்னைகள்... இண்டிகோ சிஇஓ ராஜிநாமா!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 36 காசுகள் உயர்ந்து ரூ. 91.85ஆக நிறைவு!

பாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!

டேரில் மிட்செல் மீது பந்தை எறிந்த அர்ஷ்தீப் சிங்குக்கு அபராதம்!
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

