பெரம்பலூரில் தொழிலாளர்கள் சாலை மறியல்
பெரம்பலூர் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்ததாகக்கூறி தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பெரம்பலூர் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்ததாகக்கூறி தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் சித்தளி ஊராட்சிக்குள்பட்ட பீல்வாடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பில் அய்யனார் குளம் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியில், அப்பகுதியை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை சம்பளம் பெறுவதற்காக பீல்வாடி கிராமத்தில் காத்திருந்த தொழிலாளர்களை அழைத்த ஊராட்சி நிர்வாகத்தினர், 20 நபர்கள் கொண்ட குழு நாள் ஒன்றுக்கு ஐந்தரை மீட்டர் நீளம், 9 மீட்டர் அகலம், 2 அடி ஆழத்திற்கு பணி செய்தால் மட்டுமே ரூ. 132 கூலியாக வழங்கப்படும். இல்லையெனில் அளவிற்கேற்ப சம்பளம் வழங்கப்படும் எனக்கூறி தலா ரூ. 60 முதல் ரூ. 80 வரை கூலி வழங்கினார்களாம்.
இதில் சந்தேகமடைந்த தொழிலாளர்கள் வருகைப் பதிவேட்டை பார்வையிட்டதில், ரூ. 1 லட்சத்து 21 ஆயிரம் முறைகேடு நிகழ்ந்ததாகக்கூறி, முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், கூலித்தொகை குறைவாக அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வெள்ளிக்கிழமை காலை சித்தளி- பெரம்பலூர் சாலையில் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த குன்னம் வட்டாட்சியர் செல்வம், மருவத்தூர் ஆய்வாளர் ரெத்தினசாமி, மங்களமேடு ஆய்வாளர் எம்.சிவசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பாரதிதாசன் ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், சித்தளி- பெரம்பலூர் சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...