ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திமுகவின் தூண்களாக இருப்பவர்கள் இளைஞர்கள்தான்: மு.க.ஸ்டாலின்

திமுகவில் இளைஞர் அணி எப்போதும் துடிப்பாக செயல்பட்டு வருகிறது. திமுகவுக்கு சோதனை வந்தபோதெல்லாம் இளைஞர் அணி கேடயமாக, பக்கபலமாக நின்று செயல்பட்டிருக்கிறது. மிசா காலத்தில் திமுகவின் உறுதிமிக்க தொண்டர்களுடன் இணைந்து ஆயிரக்கணக்கான இளைஞர் அணியினரும் போராடினார்கள்.மற்ற மாவட்டங்களில்

News image
Updated On :17 மார்ச் 2013, 12:56 pm

dinamani

திமுகவின் தூண்களாக இப்போதும், எதிர்காலத்திலும் இருப்பவர்கள் இளைஞர்கள் தான்  என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவிலில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி பயிற்சி பாசறை கூட்டத்தை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:

திமுகவில் இளைஞர் அணி எப்போதும் துடிப்பாக செயல்பட்டு வருகிறது. திமுகவுக்கு சோதனை வந்தபோதெல்லாம் இளைஞர் அணி கேடயமாக, பக்கபலமாக நின்று செயல்பட்டிருக்கிறது. மிசா காலத்தில் திமுகவின் உறுதிமிக்க தொண்டர்களுடன் இணைந்து ஆயிரக்கணக்கான இளைஞர் அணியினரும் போராடினார்கள்.மற்ற மாவட்டங்களில் நடந்த இளைஞர் அணி பாசறையைவிட ஈரோட்டில் நடக்கும் இந்த பயிற்சி பாசறை சிறப்பானதாகும். ஏனெனில் இது திமுகவின் குருகுலத்தில் நடக்கும் முகாம் இது. திமுகவை உருவாக்க அண்ணா, கருணாநிதி மற்றும் தலைவர்கள் ஈரோட்டில் இருந்து எந்த அளவுக்கு களப்பயிற்சி பெற்றனர். பெரியாரிடம் எத்தனை மரியாதை வைத்திருந்தனர் என்பதை இன்றைய இளைஞர்கள் முழுமையாக தெரிந்துவைத்திருக்க வேண்டும்.திமுக வில் இளைஞர்கள் அணி மிகவும் முக்கியமானதாகும். சரியான பயிற்சி அளித்தால் வருங்காலம் தி.மு.க.வுக்கு பிரகாசமாக அமையும்.

திமுகவை கட்டி காக்கும் முக்கிய தூண்கள் இந்த இளைஞர்கள் தான். இளைஞர் அணியினர் எக்காரணத்தை கொண்டும் கட்டுப்பாட்டை மீறக்கூடாது. கண்ணிய உணர்வுடன் கடமையாற்ற வேண்டும் என்று கூறினார்.

இப்பயிற்சி முகாமில் சுப.வீரபாண்டியன், கோவி.செழியன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். முகாம் தொடக்க விழாவில் திமுக மாவட்ட செயலர் என்கேகே.பி.ராஜா, முன்னாள் அமைச்சர்கள் என்கேகே.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சு.முத்துசாமி, ஈரோடு மாநகர திமுக செயலர் குமார் முருகேஸ், காஞ்சிக்கோவில் பேரூர் கழக திமுக செயலர் காஞ்சி குமார், ஈரோடு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், மாநகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை பா.ராமு உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.