சிதம்பரத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தில் பார்அசோசியேஷன் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. வழக்குரைஞர் சங்கத் தலைவர்கள்


சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் மூன்று நாட்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பது என முடிவு செய்து, திங்கள்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர்.
சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தில் பார்அசோசியேஷன் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. வழக்குரைஞர் சங்கத் தலைவர்கள் ரகோத்தமன், மந்திரி ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் சி.செந்தில், மகேந்திரன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிலஆர்ஜித வழக்குகள் அனைத்தும் கடலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை கண்டித்து மார்ச் 20-ம் தேதி வரை மூன்று நாட்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று நீதிமன்ற பணிகளை வழக்குரைஞர்கள் புறக்கணித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...