அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளன பொதுச்செயலாளர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் நியாயவிலை கடை பணியாளர்களின் வாழ்க்கை திறனை மேம்படுத்துவதற்காக இருநாள் பயிற்சி முகாம் தொடங்கியது. இம்முகாமில் பங்கேற்று அகில இந்திய மாநில அரசுப்பணியாளர் மகா சம்மேளன பொதுச்செயலாளர் கு.பாலசுப்பிரமணியன் பேசினார். அவர் பேசியதாவது: மத்தியஅரசின் புதிய பொருளாதார கொள்கையினால் நிரந்தத ஊதியம் கிடையாது. புதிய பொருளாதார கொள்கையினால்தான் புதிய பென்ஷன் திட்டம் வந்தது. 2003-ம் ஆண்டடு வரை பணியிலிருந்தவர்களுக்கு வாங்கிய ஊதியத்தில் சரிபாதி பென்ஷனாக வழங்கப்பட்டது. அதன்பின்னர் 2003-க்கும் பிறகு புதிய பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. அத்திட்டத்தில் நம்மிடமிருந்து பணத்தை பிடித்து, அதை அன்னிய மூதலீடு செய்து அதன் லாபத்தில் பென்ஷன் வழங்கவதாக அறிவித்துள்ளனர். லாபம் கிடைத்தால்தான் நமக்கு பென்ஷன். பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பதால் அரசின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும். அரசின் பொருளாதார வளர்ச்சி பாதித்தால், நமது பொருளாதார வளர்ச்சி பாதிக்கும். எனவே அரசு தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினார் .
முகாமிற்கு தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் கோ.ராஜேந்திரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா வரவேற்றார். தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் நா.தம்பிராஜா முகாமை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆ.சுப்பிரமணியன், தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க நிறுவனத் தலைவர் வை.சுப்பிரமணியன், அரசு பணியாளர் சங்க முன்னாள் மாநில பொதுச்செயலாளர் பொ.நல்லதம்பி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முகாமில் மாநிலம் முழுவதிலிமிருந்து நியாயவிலைக்கடை பணியாளர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தொடர் பிரச்னைகள்... இண்டிகோ சிஇஓ ராஜிநாமா!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 36 காசுகள் உயர்ந்து ரூ. 91.85ஆக நிறைவு!

பாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!

டேரில் மிட்செல் மீது பந்தை எறிந்த அர்ஷ்தீப் சிங்குக்கு அபராதம்!
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

