/

ஸ்ரீநடராஜ பெருமானுக்கு 5 அடி உயர வெள்ளியிலான சிங்கார செடி விளக்கு சமர்பணம்!

மதுரை அருகே உள்ள திருமங்கலம், அருப்புக்கோட்டை, விருதுநகர் பகுதிகளைச் சேர்ந்த இந்து நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் 48 கிலோ வெள்ளியிலான 5 அடி 11 அங்குலம் உயரத்தில் சிங்கார செடி விளக்கு செய்யப்பட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.28 லட்சமாகும். 33

News image
Updated On :24 மார்ச் 2013, 10:59 am

G.Sundararaj

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு 48 கிலோ வெள்ளியிலான 5 அடி உயரத்தில் சிங்கார செடி விளக்கு வழங்கப்பட்டுள்ளது.

மதுரை அருகே உள்ள திருமங்கலம், அருப்புக்கோட்டை, விருதுநகர் பகுதிகளைச் சேர்ந்த இந்து நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் 48 கிலோ வெள்ளியிலான 5 அடி 11 அங்குலம் உயரத்தில் சிங்கார செடி விளக்கு செய்யப்பட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.28 லட்சமாகும். 33 முகங்களை கொண்டது இந்த விளக்கு. இதே இந்து நாடார் உறவின் முறை சங்கத்தினரால் 1967-ல் எவர்சில்வரால் செய்யப்பட்டு சிங்கார செடி விளக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கு பதிலாக வெள்ளியில் செய்து வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளியிலான சிங்கார செடி விளக்கு நான்கு வீதிகள் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டு ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பொதுதீட்சிதர்கள் மூலம் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு சமர்பணம் செய்யப்பட்டது. இந்த விளக்கு சித்சபைக்கு முன்புள்ள கனகசபையில் இடதுபுறம் வைக்கப்பட்டு, விளக்கில் உள்ள 33 முகங்களும் ஏற்றபட்டு ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் காசிமணி, செயலாளர் கே.பி.கந்தசாமி, பொருளாளர் ஜம்புலிங்கம் உள்ளிட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பஙகேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.