விருதுநகரில் தேமுதிகவின் சார்பில் செவ்வாய்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் விநாயகம், ஒன்றியச் செயலாளர் பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழக சட்டப்பேரவையிலிருந்து தேமுதிக உறுப்பினர்கள் 6 பேரை ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அதை உடனே தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து, விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீஸார் விரைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 29 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

